திருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர் கப்பல்கள்!

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து நடத்தும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான மூன்று போர் கப்பல்கள் இன்று திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ளன.

SLINEX-2018 என்று பெயரிட்டுள்ள இந்த கூட்டு போர் பயிற்சி திருகோணமலை துறைமுகத்தை மையமாக கொண்டு கிழக்கு கடற்பரப்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இந்த கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள், உலங்குவானூர்தி என்பனவும் சீனன்குடா கடற்படை தளத்திற்கு வந்துள்ளன.


இலங்கை கடற்படையின் சயுர, சமதுர, சாகர ஆகிய கப்பல்களும், இந்திய கடற்படையின் கிரிச், கோராடிச், சுமித்ரா ஆகிய கப்பல்கள் இந்த கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

ஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த போர் பயிற்சிகளில் முதல் முறையாக இலங்கை விமானப்படையினரும் இணைந்துக்கொள்ள உள்ளனர்.


வான் பாதுகாப்பு, கடல் ரோந்து , விமானப் பயிற்சி, ஆயுத பயிற்சி, மீட்பு பயிற்சி, கடல் போர் பயிற்சி உட்பட பல இராணுவப் பயிற்சிகள் இதன் போது மேற்கொள்ளப்பட உள்ளன.

இதேவேளை, இதுவரை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த இந்த கூட்டு போர் பயிற்சி, இவ்வருடம் முதல் வருடந்தோறும் நடத்தப்பட உள்ளது.


#Trinkomaee   #srilanka  #india   #tamilnews #Nave

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.