தமிழக முதல்வர் பழனிச்சாமி விரைந்து செயற்பட வேண்டும்.!

ராஜீவ் கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.


இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உடனடியாக சட்ட சபைக் கூட்டத்தைக் கூட்டி, மேற்படி 7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் இவர்களின் விடுதலை சாத்தியமாகும். தமிழக அரசு இதைச் செய்யாது விட்டால் வரலாற்றுப் பழியைச் சுமக்கவேண்டிய நிலை தமிழக முதல்வருக்கு ஏற்படும்.
Powered by Blogger.