சிரியாவில் பொறுப்பற்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன: ட்ரம்ப் கண்டனம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தும் பொறுப்பற்ற தாக்குதல்களை அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா
எச்சரித்துள்ளது.
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன.
இதில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்ற இறுதிக் கட்டப் போரை இட்லிப் மாகாணத்தில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,”சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடக்கும் பொறுப்பற்ற தாக்குதலை நிறுத்த வேண்டும். அவர்கள் மனிதாபிமானமற்ற தவறுகளைச் செய்து வருகிறார்கள். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படலாம்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும்போது, ”அனைவரின் பார்வையும் பஷார் அல் ஆசாத், ஈரான், ரஷ்யாவிடமே உள்ளன. ரசாயன ஆயுதங்கள் உபயோகிக்காதீர்” என்று தெரிவித்திருக்கிறார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.