ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுத ஏற்றுமதி மையமாக இலங்கை – பொதுபலசேனா!

ஐ. எஸ் தீவிரவாதிகள் இலங்கையை மையமாக வைத்துகொண்டு ஆயுத ஏற்றுமதிகளை செய்து வருவதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “காத்தான்குடியில் இங்கி வருகின்ற ஆயுதக் குழுக்களினால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சர் ஒருவரின் உறவினர், ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், அமைச்சருடன் நெருங்கிய தொடர்பை வைத்து வருகின்றார்’ என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.