விடுதலைப் புலிகள் குறித்து பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு?

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தொடருமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்தரவுக்கு சட்டமா அதிபர் இது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன், குற்றவியல் சட்டத்தின் 120ம் சரத்துக்கு அமைய குற்றமிழைத்துள்ளார் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பின் 157வது அத்தியாயத்தை மீறியுள்ளதாகவும், அது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Vijayakala Maheswaran   #jaffna #LTTE  #tamilnews   #court  #poojitha jayasuntharam
Powered by Blogger.