யாழில் மீனவர் வலையில் சிக்கிய சிறுத்தைப் புலி!

யாழ். சுழிபுரம் - சவுக்கடி கடற்பகுதியில் சிறுத்தைப் புலி வகையைச் சேர்ந்த அரிய வகை உயிரினம் ஒன்று மீனவரின் வலையில் சிக்குண்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெறுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர்களால் வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சவுக்கடி கடற்கரையில் மீனவர்கள் இறால் பிடிப்பதற்கான கூடுகளை வைப்பது வழக்கம். அந்த வகையில் சுழிபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்ற மீனவர் குறித்த கூட்டை கடற்கரையில் வைத்துள்ளார்.

தொடர்ந்து இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்று அவர் கூட்டை இழுத்துள்ளார்.

இதன்போது, அந்த கூட்டின் எடை அதிகமாக இருந்துள்ளது. வலையை இழுத்து பார்த்த போது சிறுத்தைப் புலி போன்ற ஒரு விலங்கு காணப்பட்டுள்ளது.

இவ்வகை சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் வன்னி காடுகளிலேயே அதிகம் உள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தில் இவற்றை பார்ப்பது அரிது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
#Chulipuram #srilanka #tamilnews #savukkadi #fishermen

No comments

Powered by Blogger.