வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் கைது!

வெளிநாட்டு நாணயத்தாள் ஒரு தொகையை சட்ட விரோதமான முறையில் இந்தியவிற்கு எடுத்து செல்ல முற்பட்ட பெண் ஒருவரை இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று அதிகாலை 4 மணியளவில் ஜெட் எயார் வேய்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 9W255 என்ற விமானத்தில் இந்திய நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுடைய பயணப்பையில் இருந்து 3,727,344 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் மற்றும் ஸ்வீஸின் பெரேன்க் நாணயத்தாள்கள் ஒரு தொகை சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


#srilanka  #tamilnews  #arest   #womean   #airfort
Powered by Blogger.