தோற்றுப் போன நீதியாகுமோ ????நீதித்தாயே! நீயும் ஒரு தாய் தானே. ?
குற்றஞ்சாட்டப் பட்டவர்
குற்றங் களைய முடியாத
கண்கட்டிய வித்தைக்காரி  நீ.

காலக் கடத்தலில் கடந்தேகும்
இளமைக் கனவைப் புதைத்திட்டாய்.
தாயும் சேயும் இணையும் கோல
வாழ்வு தன்னைக் குலைத்திட்டாய்.

நடையாய் நடக்கும் முதுமைத் தாயின்
நரையில் வலியை விதைத்திட்டாய்.
பெற்றவள்  மகவைக் கொன்றிடச் சொல்லும்
கொடிய வதைப்பை கொடுத்திட்டாய்.

வசந்தகால வாழ்வைப் பறித்து
வடுவை உன்னில் பதித்திட்டாய்.
விடியல் காணா விழியைத் தாங்கி
விழியுள்ளோர் வழியை சிதைத்திட்டாய்.

இருபத்தேழாண்டாய் ஒரு
குற்றங்களைய முடியாத உன்
தராசு பிடித்த கரங்களிலே
இன்னும் வலி ஏறலையே....
சாதனை படைத்தாய் வாழியவே...!

உரத்துக் கத்தும் நீதிக்குரல்கள்
ஒலி புகா
மரத்த காது பெற்றாய் வாழியவே..!

தமிழக நீதித் தாயே!
இதோ!
உனக்கொரு சந்தர்ப்பம்.
உன்னோடு பேசவே வரம்தந்தது
உச்ச நீதி மன்றம்.
சரிவர அணிந்து நீதிநிலை நாட்டு.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

No comments

Powered by Blogger.