சுற்றுச்சூழல் அக்கறையற்ற சுற்றுலாப்பயணிகள் செயல்!

இலங்கையில் யாழ்ப்பாணக் கடல் நீரேரிக்குக் குறுக்காக அமைக்கப்பட்ட சங்குப்பிட்டி சாலைப் பாலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஓரிடமாகும். இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சங்குப்பிட்டியையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கேரதீவையும் இணைக்கின்றது. செறிவான மக்கள் தொகை கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் இரண்டு பாலங்களில் இதுவும் ஒன்று. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்தப் பாலத்தின் சுற்றுப்புற சூழலை அசிங்கப்படுத்தும் விதமாக சாப்பாட்டு பொதிகளைச் சுற்றிய பொலித்தீன் பைகள் தண்ணீர்ப் போத்தல்கள் போன்றவற்றை எறிந்து விட்டுச் செல்கின்றனர். குப்பைகளை உரிய இடத்தில் போடுவதற்கான ஒழுங்கு முறைகளைப் பின்பற்றினால் அவ்விடத்தின் அழகை மெருகூட்டலாமே.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
 Latha Kanthaija







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.