திகனவில் பரவிய வன்முறைகளுக்கு -பொலிஸாரின் குறைபாடே காரணம்- ரணில்!

கண்டி – திகன பகு­தி­யெங்­கும் பர­விய இன வன்­மு­றை­கள் பொலி­ஸா­ரின் குறை
பாடுகளுக்­கான மிகப் பெரும் உதா­ர­ணம் எனத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­ர­ம­ சிங்க தெரி­வித்­தார்.
பொலிஸ் மேல­திக படைத் தலை­மை­ய­கத்­தில் நேற்று இடம்­பெற்ற 152 ஆவது பொலிஸ் தின வைப­வத்­தில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைக் கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
சட்­டம் ஒழுங்­கின் பாது­காப்பு ஊடா­கவே ஓர் உறு­தி­யான நாடு உரு­வா­கும். சட்­டம் ஒழுங்­கைப் பாது­காக்­கும் முதன்­மை­யான நிறு­வ­னம் பொலிஸே. அரசு ஒன்­றுக்கு சட்­டம் ஒழுங்­கைப் பாது­காக்க முடி­யா­மல் இருக்­கு­மா­யின் அந்த ஆட்­சியே ஆட்­டம் காணும்.
இங்­கி­லாந்து நாடே முதன் முத­லாக சட்­டம் ஒழுங்கை பாது­காக்க, பொலிஸ் துறையை உரு­வாக்­கி­யது. இன்று உல­கின் அனைத்து நாடு­க­ளி­லும் பொலிஸ் துறை சட்­டம் ஒழுங்கை பாது­காக்­கும் பணி­யில் உள்­ளது.
சட்­டத்­தின் மீதான ஆட்­சியை பாது­காக்க பொலி­சா­ரின் பணி இன்­றி­ய­மை­யா­தது. சட்­ட­மும் ஒழுங்­கும் பாது­காக்­க­பப்­டும் போதே நாட்­டின் உறு­தித் தன்மை உரு­தி­யா­கும். உறுதி அதி­க­ரிக்­கும்­போதே நாட்­டுக்கு முத­லீ­டு­கள் வரும்.
எனவே அபி­வி­ருத்­தி­யின் தலை­மைப் பங்கு சட்­டம் ஒழுங்­கைப் பாது­காக்­கும் பொலி­சா­ரின் கைக­ளி­லேயே உள்­ளது.
இந்த நிலை­யில் சட்­டம் ஒழுங்­கைப் பாது­காக்க பொலி­சா­ரும் அதி­ர­டிப் படை­யி­ன­ரும் முன்­னெ­டுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முழு ஒத்­து­ழைப்பை அரசு வழங்­கும். அவர்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்து வச­தி­க­ளும் செய்­து­கொ­டுப்­போம்.
உன்­மை­யில் 2014 ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது தற்­போது பொலி­சா­ரின் செயற்­பா­டு­க­ளில் பெரும் முன்­னேற்­றம் காணப்­ப­டு­கின்­றது. பொலி­ஸா­ரின் சிறந்த நட­வ­டிக்­கைக்கு எடுத்­துக்­காட்டு, உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­க­ளில் ஒரு வன்­மு­றை­யே­னும் பதி­வா­கா­மை­யா­கும்.
குறைப்­பா­டு­க­ளும் உள்­ளன. அண்­மை­யில் திகன இன வன்­மு­றை­க­ளுக்கு கார­ணம் பொலி­ஸா­ரின் குறைப்­பாடே. அதி­லி­ருந்து நாம் பாடம் கற்று மீள­வேண்­டும். முகப் புத்­த­கம் ஊடா­கச் சட்­டம் ஒழுங்­கைக் குலைக்க உள்ள வாய்ப்­புக்­களை நாம் அறிந்து அந்­தச் சவாலை வெற்­றி­கொள்­ள­வேண்­டும்.
பொலி­ஸா­ரின் சம்­பள, பதவி உயர்வு பிரச்­சி­னை­க­ளுக்கு விரை­வில் தீர்வு வழங்­கப்­ப­டும்.
எனவே பொலி­ஸா­ரின் செயற்­பா­டு­கள் சிறப்­பாக உள்ள நிலை­யில், இதனை மேலும் வளர்க்க வேண்­டும். அப்­போதே சிறந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யும். என்­றார்.

No comments

Powered by Blogger.