அண்டாவ காணோம்: சண்டையும் சண்டை நிமித்தமும்!

அண்டாவ காணோம் படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்க ஷ்ரேயா ரெட்டி முன்னணி ரோலில் நடிக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. சி.வேல்மதி இயக்கும் இந்தப் படத்துக்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வமித்ரா இசையமைக்க, பாடல்களை எழுதியுள்ளார் மதுரகவி.
இந்தப் படத்தில் பிரதானமாக இடம்பெற்றுள்ள அண்டா கதாபாத்திரத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் அவரது வாய்ஸ் ஓவரிலேயே படத்தின் கதை நகருவதாகவும் அமைந்துள்ளது. ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களை இதே ஜேஎஸ்கே நிறுவனம் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 15) இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். கிராமத்தில் அக்கம்பக்கத்து வீடுகளுக்குள் நடக்கும் பெண்களுக்கு இடையேயான புறணி பேசுவது, சண்டை போடுவது போன்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த டீசர்.
தொலைந்துபோன பொருளைத் தேடி ஸ்ரேயா ரெட்டி ஆக்ரோஷமாகப் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் சண்டைக்குப் போவதாகக் காட்டப்பட்டுள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.
இந்தப் படம் ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 18ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.