சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி ....


திருகோணமலையில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட  பெண் விரிவுரையாளர்
கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண்  விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போய் அவரின் சடலம் சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா-ஆசிக்குளம் இலக்கம் 108 கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நடராசா போதநாயகி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (20), விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் காவலாளிகளும், இவர்  முச்சக்கர வண்டியில் சென்றதை அவதானித்ததாக  குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண் விரிவுரையாளரின் பை மற்றும் காலணி போன்ற பொருட்கள் இன்று காலை (21),  திருகோணமலை சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டு பின் அடையாளம் காணப்பட்டார்.
Powered by Blogger.