‘சர்கார்’ குறித்து மனம்திறந்த நடிகர்!

சர்காரில் தான் நடித்தது குறித்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகர் லல்லு.
ஸ்ரீ கணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்', பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', கெளதம் கார்த்திக் நடித்த 'ரங்கூன்' போன்ற படங்களில் நடித்ததன் வாயிலாகக் கவனம் பெற்றவர் நடிகர் லல்லு. தற்போது விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர், அந்தப்படம் குறித்த அனுபவங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் , “சர்கார் படத்தில் நடிக்கும் அருமையான வாய்ப்பை எனக்குக் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. விஜய்யுடன் நான் இணைந்து நடிப்பேன் எனக் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. இந்தப் படத்தில் நடித்த இந்தத் தருணம் கனவு நனவானதைபோல உள்ளது” எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ஆம் தேதி நடக்கவுள்ளது. துப்பாக்கி, கத்தி போலவே இந்தப் படமும் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

No comments

Powered by Blogger.