அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துக்கு எதிர்ப்பு கிடையாது?

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்படவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டப் போவதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது அனைத்து பிரஜைகளுக்கும் சுதந்திரமாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

அண்மையில் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது இவ்வாறான சுதந்திரம் இருக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டங்களின் போது கைதிகள் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணிக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டுதில்லை எனவும் அதற்காக பூரண சுதந்திரம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.