இசை ராஜா 75

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக இசையமைப்பாளர் இளைய ராஜா நடத்தும் பிரம்மாண்ட இசை விழா ‘இசை ராஜா 75’ என்ற தலைப்பில் சென்னையில் நடைபெறுகிறது.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட இளையராஜா எண்ணில் அடங்காப் பாடல்களைத் தந்தவர். 75வயதை கடந்துவிட்டவர். தற்போது படங்களுக்கும் இசையமைத்து வரும் இளையராஜா, பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்திவருகிறார்.
இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், உறுப்பினர்கள் நலனுக்காகப் பல்வேறு நலத் திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதில் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் இளையராஜாவை வைத்து ‘இசை ராஜா 75’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட இசை விழாவை வரும் ஜனவரி மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விஷால், நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து, வரும் ஜனவரியில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.