யாழில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

தமது விடுதலையை வலியுறுத்தி எட்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில், இன்று யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பையோ அல்லது குறுகிய கால புனர்வாழ்வினை வழங்கியோ விரைவில் இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தாமதிக்கப்படும் பட்சத்தில் வடமாகாணம் தளுவிய போராட்டங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.No comments

Powered by Blogger.