இலங்கையில் நடந்த கொடூரங்களை லண்டனில் அம்பலப்படுத்தும் யாழ். தமிழ் பெண்!

இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் பாப் பாடகராக புகழ் பெற்றுள்ள மாயா அருள்பிரகாசத்தின் வாழ்வில் நடந்த சம்பவங்களை விளக்கும் ஒரு ஆவணப்படம் தயாராகியுள்ளது.


மாதங்கி, மாயா, மியா என்ற 3 பெயர்களையும், பெயர்களுக்கு ஏற்ற 3 வெவ்வேறு பின்னணிகளையும் அவர் கொண்டுள்ளார்.

மாதங்கி என்ற பெயரை தான் வாழ்ந்த தமிழ் பின்னணியை நினைவூட்ட அவர் வைத்துள்ளார். மாயா என்ற பெயரை லண்டனில் வளர்ந்ததைக் குறிப்பதற்காக அவர் வைத்துள்ளார்.

மேடைப்பாடகி, ஆவணப்படம் எடுப்பவர், பிரித்தானிய பாப் இசையில் பங்கு வகிப்பவர், சமாதான ஆர்வலர், அமெரிக்க பொழுதுபோக்கு நிகழ்வுகளை விமர்சிப்பவர் என பல காரணங்களை குறிப்பதற்காக மியா என்ற பெயரை அவர் வைத்து கொண்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த மாதங்கி, 27 வருடங்கள் நடந்த கொடிய போரில் சிக்கினார். அவரது தந்தை இந்த போருடன் தொடர்புப்பட்டார். இதனால் அவர் லண்டனுக்கு புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 35 டிகிரி வெப்பத்தில் வாழ்ந்த மாதங்கி பனியில் உரையும் பிரித்தானியா மற்றும் கனடா வெப்பநிலைக்கு பழக வேண்டிய நிலை ஏற்பட்டது.

பல பிரச்சினைகளுக்கு மத்தியில் லண்டன் சென்றவர் அங்கு படிப்படியாக முன்னேற ஆரம்பித்தார். அதற்கமைய தற்போதைய பிரபல பாப் இசை பாடகி என்ற பெறுமைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

கடந்த சில காலங்களுக்கு முன்னர் அவர் பல சர்ச்சையில் சிக்கியிருந்தார். கனடா செல்ல அவர் விமான நிலையத்தில் வைத்து தடை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவர் இசை மீது அதிக கொண்ட ஒருவராகும். அந்த இசையை தனது மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என அவர் திட்டமிட்டார். இலங்கையில் போரில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தனது இசை காணப்பட வேண்டும் என அவர் எண்ணினார்.

அதற்கமைய, தற்போது அவரால் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தில் மக்களுக்காக தனது இசையை எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

தமிழர்கள் அனுவித்த சித்திரவதைகள் மற்றும் துன்பங்களுக்காக அவர் கொடுக்கும் குரல் எந்த அளவு நியாயமானதென்பதனை இந்த ஆவணப்படம் தெளிவாக விளக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரையில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் அவர் பாடிய பாடல்களின் வரிகள், பெரிதாக உலகிற்கு வெளிப்படவில்லை. இசை சத்ததில் சிக்கி வரிகள் மக்களிடம் போய் சேரவில்லை.

ஆனால் இந்த ஆவணப்படம் மூலம், அகதிகளின் கதையும், அகதியான தனது வாழ்க்கை கதையும் எப்படி என தெளிவாக காணப்பட்டுள்ளது.

அகதிகளின் வாழ்க்கைக் கதை ஏன் இந்த அளவிற்கு முக்கியம் என்பதனை மாதங்கி இந்த ஆவணப்படத்தில் தெளிவாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.