அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்கள்??

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கில் அதிகாரம் இருந்தும் சட்டமா திபர் திணைக்களத்தின் அசமந்தப் போக்கு மற்றும் அவர்களின் திட்டமிட்ட கால தாமதம் என்பன ஒரு அரசியல் பழிவாங்கல்களே என சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும், அதில் இருக்கும் உள்நோக்கம் தொடர்பிலும் எமது ஆதவன் தொலைக்காட்சியின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ” அரசியல் கைதிகள் மீது குற்றச்சாட்டினை சுமத்தியவர்கள் என்ற அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு தான் இங்கு அவசியம்.

அந்தவகையில் சட்ட மா அதிபர் திணைக்களம் அவர்களுக்கான தண்டனைகளை குறைத்து அல்லது சிறிய தண்டனையை வழங்கியாவது அவர்களுக்கான புனர்வாழ்வினை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை நடைமுறையில் சாத்தியமில்லை.

மேலும் சட்ட மா அதிபருக்கு அவர்களுக்கன பிணை வழங்கும் அதிகாரம் உள்ளது. இருப்பினும் அந்த அதிகாரத்தை அவர்கள் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதே எனது கருத்து.

அத்துடன் இவ்வாறு பல வருடமாக சிறையில் அவர்கள் அடைத்து வைத்திருப்பதானது ஒரு அரசியல் பழிவாங்கலே” என அவர் கூறினார்.

#jaffna #k.v.tavarasa  #tamilnews #court  #prison  #srilanka #goverment

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.