கிளிநொச்சியில் இராணுவத்தால் தொடரும் பதற்றம்!

கிளிநொச்சி - சாந்தபுரம் அம்பாள்நகர் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களின் குடிசைகளை அகற்றியதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதி அண்மையில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், காணியின் உரிமையாளர்கள் அங்கு மீள்குடியேறியிருந்தனர்.

அதில் தற்காலிக கொட்டில்களை அமைத்து வாழ்த்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பலவந்தமாக அகற்றியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இடம் பெயர்ந்த பெருமளவான குடும்பங்கள் இந்த காணிகளில் குடியிருந்தனர். 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய நிலையில் குறித்த காணிகளை இராணுவம் கையப்படுத்தி வைத்தருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதியை மீண்டும் இவர்கள் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

#kilinochchi   #jaffna  #tamilnews #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.