கிளிநொச்சியில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விவசாயக்கிணறுகள் அமைப்பதற்கான காசோலைகள் மற்றும் விதை உற்பத்திப் பொருட்கள், விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கூட்டிணைந்த சமூக பொறுப்பு நிதியத்தின் ஊடாக விவசாயக் கிணறுகள் அமைப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளில் 47 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், குறித்த திணைக்களத்தினால் 2018ம் ஆண்டுக்கான மாகாணம் குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விதை தானியங்களும் விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான வை.தவநாதன், சு பசுபதிப்பிள்ளை, அமைச்சின் அதிகாரிகள் விவசாய அமைச்சின் பிரதிநிதிகள், பிரதி மாகாண விவசாயப்பணிமனை உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.