கிளிநொச்சியில் பெண்ணொருவரை காணவில்லை!

கிளிநொச்சியில் பெண்ணாருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில், அப்பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி இராமநாதன் பாம் மருதநகர் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயொருவரே (வயது-46) இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரின் கணவன் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி வீட்டிலிருந்து சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்று திரும்புவதாக தெரிவித்து சென்ற குறித்த பெண் இதுவரை வீடு திரும்பவில்லையென அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தமது உறவினர்களது வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய போதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென கணவன் கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மைக்காலமாக பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதும், காணாமல் போனதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசாவை 0776753485 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் கோருகின்றனர். 

No comments

Powered by Blogger.