ஸ்ரீலங்கன் விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம்!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யு 330 – 300 ரக விமானம் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தினமும் மெல்பர்ன் நோக்கி பயணிக்கவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஹொங்கொங்கிற்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன.
ஹொங்கொங்கிற்கு பயணிப்பதற்கு மற்றும் ஹொங்கொங்கிலிருந்து வருகை தருவதற்கு விமானச் சீட்டுகளை கொள்வனவு செய்துள்ள பயணிகள், ஏனைய விமான சேவைகள் மூலம் தமது பயணத்தை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான மேலதிக தகவல்களை தமது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
Powered by Blogger.