விடுதலைப் புலிகளின் இராணுவ படைப்பிரிவுகளுக்கு பிரபாகரன் நேரடியாக கட்டளை வழங்கிய நிலத்தடி!

விடுதலைப் புலிகளின் இராணுவ படைப்பிரிவுகளுக்கு பிரபாகரன் நேரடியாக கட்டளை வழங்கிய நிலத்தடி நிர்மாணக் கட்டடம் ஒன்றை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு - வடக்கு பெருங்காட்டுப் பகுதியில் நிலத்திற்கு கீழாக அமைக்கப்பட்ட குறித்த மூன்று மாடி நிலத்தடி நிர்மாணக் கட்டடங்களை 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.

நிலத்திற்கு கீழ் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதலாவது தளத்திற்குள் சிறிய ரக வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கட்டட நிர்மாணம் சுமார் 30 சதுர அடி நிலத்திற்கு கீழ் இருந்து மூன்று மாடிகளாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.2000ஆம் ஆண்டிற்கு முன்னர் குறித்த மூன்றாவது நில அறையின் கீழ் ஒன்று கூடிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகள் இராணுவத்தினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2000ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் இந்த நிலத்தடி கட்டடம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்பொழுது குறித்த இடத்தை மக்கள் பார்வையிட தடைவிதித்துள்ள படையினர் இவற்றை வெற்றியின் அடையாளமாக பாதுகாத்து வருகின்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.