பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவைகள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை தயாராகி வருகிறது.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தமான விபரமான திட்ட அறிக்கை ஒன்றை இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை சமர்பிக்க உள்ளது.
அறிக்கையை தயாரிக்க இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை, இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள உள்ளது.
இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை வெளிநாடு ஒன்றின் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.
இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையின் கீழ் 120 விமான நிலையங்கள் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.
தென் இந்தியா விமான நிலையங்கள், மலேசியா, தாய்லாந்து நாடுகளின் விமான நிலையங்களுடன் விமான சேவைகளை நடத்தும் வகையில் பலாலி விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
இந்தியா, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான யோசனையை முன்வைத்திருந்துடன் காங்சேன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் யோசனை முன்வைத்திருந்தது.
#palali  #jaffna #srilanka  #tamilnews  #india

No comments

Powered by Blogger.