இலங்கைப் பொளாதாரம் பாரிய நெருக்கடியில்!

18 மாதங்களுக்கு பிறகு கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று 6000 புள்ளிகளுக்கு கீழ் பதிவாகியுள்ளது.

முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் அது 57.28 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் , அது 5971.21 ஆக பதிவாகியுள்ளது.

எஸ் என்ட் பீ ஸ்ரீ லங்கா டுவென்டி குறியீட்டெண் 56.26 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 3074.02 ஆக பதிவாகியுள்ளது.

இப்படியே நிலை தொடருமாக இருந்தால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர் கொள்ள நேரிடும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்...

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்...

டொலரின் பெறுமதி 200 ரூபாவாக அதிகரிக்கும்?

சிங்கப்பூர் உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் டொலர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தனியார் வானொலிச் சேவையொன்றில் ,இன்று இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

#srilanka #colombo  #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.