கன்னடத்தில் அறிமுகமாகும் அனுபமா??

பிரேமம் திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது கன்னட மொழி திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பிரேமம்’. அதில் கதாநாயகியாக அறிமுகமான மூன்று நடிகைகளுக்குமே மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்தது. அதை வைத்து மூவரும் அவரவர் பாணியில் தமிழ்,தெலுங்கு என முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர். இதில் அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாகத் தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழில், தனுஷுடன் ‘கொடி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார் அனுபமா. புனித் ராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதை உறுதிப்படுத்தும் விதமாக அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார் அனுபமா. 'நடசார்வபவுமா' எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தை பவன் வடேயர் என்பவர் இயக்குகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. பழம்பெரும் நடிகை சரோஜாதேவி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

No comments

Powered by Blogger.