பிரதமர் திருடர் (#PMChorHai): திவ்யா மீண்டும் ட்வீட்!

சமூக வலைதளத்தில் பிரதமரைத் திருடர் என்று விமர்சித்ததற்காக நடிகையும் காங்கிரஸ் நிர்வாகியுமான திவ்யா மீது, லக்னோவில் தேசத்
துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து திவ்யா மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவைப் பதிவிட்டுள்ளார்.
தமிழில் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையில் அவரே திருடர் என நெற்றியில் எழுதிக்கொள்வது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய பதிவையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சையது ரிஸ்வான் அகமது என்ற வழக்கறிஞர், மோதிநகர் காவல் நிலையத்தில் திவ்யா மீது புகார் மனு அளித்தார். இதையடுத்து திவ்யா மீது தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேசத்துரோகக் குற்றப் பிரிவான 124ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர் சையது ரிஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி ஒரு கட்சிக்கு மட்டும் பிரதமரல்ல, அவர் நம் நாட்டுக்கே பிரதமராவார். அவரைப் பற்றி தவறுதலாகக் கருத்தை பதிவிடுவது தவறு. திவ்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.