பருத்தித்துறை அங்காடி வியாபாரிகளுடன் நகர சபை உறுப்பினர்கள் சந்திப்பு!

வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மேல்மாடியில் இயங்கும் மரக்கறி சந்தையை இடமாற்றுவது தொடர்பாக நகரசபை தலைவர் மற்றும் உறுப்பினர் வியாபாரிகளுடன் சற்றுமுன்னர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

மரக்கறி சந்தையை கீழிடத்துக்கு மாற்றக் கோரி  வியாபாரிகள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தை முற்றாக முடங்கியது.

தற்போது இதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நகர சபையினர் வியாபாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.  

No comments

Powered by Blogger.