தேங்காய் விற்ற இளைஞர் திடீரென பொலிஸாக மாறிய சம்பவம்!

பொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில் கையெழுத்தை பெற்றுக் கொண்ட இளைஞனை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் - கஞ்சிக்குளி தேவாலய தோட்டம் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் சிலாபம் தினச் சந்தையில் தேங்காய் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து வருபவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சிலாபம் - மல்வத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் பெண்ணின் வீட்டுக்கு சென்று போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி எனக் கூறி பெண்ணை அச்சுறுத்தியுள்ளார்.

வெளிநாடு சென்றுள்ள பெண்ணின் கணவன், நீர்கொழும்பு நகரில் உள்ள தங்க ஆபரண கடையொன்றை உடைத்து கொள்ளையிட்டது தனக்கு தெரியும் எனக் கூறி வெற்று காகிதத்தில் கையெழுத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த பெண் வெற்று காதிதத்தில் கையெழுத்திட மறுத்துள்ள நிலையில், சந்தேகநபர் பலவந்தமாக கையெழுத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இது சம்பந்தமாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.