நீதித்துறையில் அரசியல் கைதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்: சிவசக்தி ஆனந்தன்!

நீதித்துறையின் மூலம் விடுதலை கிடைக்கும் என்பதில் அரசியல் கைதிகள் நம்பிக்கை இழந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீண்டகாலமாக சிறைச்சாலைகளிலே இந்த கைதிகள் இருந்து வருகின்றார்கள். பல தடைவைகள் உணவு தவிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் காரணமாக சில அரசியல் கைதிகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் இருக்கிறது அதற்காக மருந்துகளை உட்கொள்ளும் அரசியல் கைதிகள் தற்போதைய நிலையில் அதனை நிறுத்தியிருக்கிறார்கள்.

இவர்களுடைய உடல்நிலை மோசமடைந்து சோர்வான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே உடனடியாக ஐனாதிபதி இவர்களது கோரிக்கையான குறுகியகால புனர்வாழ்வளிக்கப்பட்டு தங்களை விடுதலை செய்யவேண்டும் என்பதை நிறைவேற்ற வேண்டும்.

நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக விடுதலை கிடைக்கும் என்பதில் இருந்து அவர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டபிறகு கூட நல்லிணக்கத்தை கட்டி எழுப்பவும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் இன்று இருக்கும் ஐனாதிபதி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது எமக்கு மனவருத்தத்தை தருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.