இலங்கை பெண்கள் அணி ஆசிய கோப்பையை வெல்ல களம் இறங்கும்!

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கிண்ண வலைபந்தாட்டப் போட்டில் இலங்கை பெண்கள் அணி பங்கேற்கயுள்ளது. அதற்கான தகுதியை ஈட்டும் வகையில் நாளை சிங்கபூரில் ஆரம்பாகும் 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் பங்குபெற்றுள்ளது.

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக அரங்கில் நாளைமுதல் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள எம்.1 ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் 12 நாடுகள் பங்குபெறுகின்றன.

இந்நிலையில் அதிக தடவைகள் சம்பியனான இலங்கை (1989, 1997, 2001, 2009), மூன்று தடவைகள் சம்பியனான சிங்கப்பூர், இரண்டு தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்றெடுத்த நடப்பு சம்பியன் ஆகியவற்றுடன் மலேசியா, ஹொங்கொங், இந்தியா, ஜப்பான், மாலைதீவுகள், சைனீஸ் தாய்ப்பே, தாய்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், புருணை ஆகிய நாடுகள் நான்கு குழுகளில் போட்டியிடுகின்றன.

இலங்கையைப் பொறுத்தமட்டில் முதல் சுற்றில் பாரிய சவால் இருக்காது என்றே கருதப்படுகின்றது. ஆனால் இரண்டாவது சுற்றில் இலங்கைக்கு பாரிய சவால் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments

Powered by Blogger.