இரு யாழ் தமிழ் வீராங்கனைகள் இலங்கை வலைப்பந்தாட்ட அணியில்!

சிங்கப்பூரில் நாளை நடைபெறவுள்ள 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இதில் யாழ்ப்பாணம் இரு தமிழ் விராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெறுகின்றனர்.

மேலும், சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

இலங்கை அணி

சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அமரவங்ஷ, நௌஷலி ராஜபக்ஷ, துலாங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, ஹசிதா மெண்டிஸ், எழிலேந்தி சேதுகாவலர்.

No comments

Powered by Blogger.