ரயிலில் பட்டா கத்தியுடன் வலம் வந்த மாணவர்கள்!

சென்னை ஆவடி அருகே ரயிலில் பட்டா கத்தியுடன் பயணித்த தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேரை காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ஆவடி அருகே அன்னனூர் ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் சிலர் பட்டா கத்திகளுடன் ரயிலில் ஓடியதால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் ரஞ்சித் உட்பட 7 தனியார் கல்லூரி மாணவர்களை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் கத்திகளுடன் பயணித்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தவறிழைத்த மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.