தினகரன் மைத்திரியின் பிறந்தநாளில் கொடுத்த சோதனை!

இன்றைய (2018.09.03) தினகரன் பத்திரிகையில், “நேபாளத்திற்கு விஜயம் செய்த இலங்கை ஐனாதிபதி மைத்ரிபால சிறிசேனா” என்பதற்கு பதிலாக ஜனாதிபதி “மஹிந்த ராஜபக்‌ஷ” என்று செய்தியை வெளியிட்டுள்ளதால் குறித்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரச பத்திரிகையில் ஒன்றில் இவ்வாறான செய்தி வெளியாகிருக்கின்றமை சிறிலங்கா அரசுக்கும் அது சார்ந்த துறைக்கும் பெருத்த அவமானமான நிலையாகியுள்ளது.
எந்தவொரு செய்திகளையும் அச்சிலிடுவதற்கு முன்னர் பலரால் அது சரி(புரூப்) பார்க்கப்படும். ஆனால் இந்த பெரும் தவறினை தவறவிட்டுவிட்டனர்

இது தவிர குறித்த பத்திரிகையின் 1000 கணக்கான பிரதிகள் நேற்றிரவே நாடு முழுவதும் விநியோகத்திற்கு விடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றிய மேலதிக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றது.
Powered by Blogger.