திருகோணமலையில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கப் படை அதிகாரிகள்!

ஒருங்கிணைந்த கடல்சார் திறன்கள் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.

திருகோணமலை டொக்யார்ட்டில் உள்ள சிறப்பு படகு படையணியின் அரங்கில் நேற்று முன்தினம் இந்த பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், போதைப்பொருள் முறியடிப்பு படையணி, மற்றும் கூட்டு ஒருங்கிணைப்பு அதிரடிப்படை –மேற்கு ஆகியவற்றின் ஏழு அதிகாரிகள் இந்தப் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த 16 பேர் மற்றும் சிறப்பு படகு படையணியைச் சேர்ந்த 16 பேர் உள்ளிட்ட 32 சிறிலங்கா கடற்படையினருக்கு, இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

எதிர்வரும் 14 ஆம் நாள் வரை இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.