வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு !

வவுனியா - கூமாங்குளம் கிராமத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்க புனர்வாழ்வு அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புனர்வாழ்வு அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் எஸ்.எம் பதூர்தீன் தலைமையில் இன்று வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்டஈடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக விண்ணப்பித்த கூமாங்குளத்தை சேர்ந்த 45 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 27 குடும்பங்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

வன்முறையில் பாதிக்கப்பட்டு நஸ்டஈடு பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.


இது குறித்து கூமாங்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், கூமாங்குளம் கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறை காரணமாக கிராம மக்கள் இடம்பெயர்வுகளை சந்தித்து இருந்தனர்.

பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் கொள்ளையிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்ட்டிருந்த நிலையில் அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு இலட்சம் ரூபா நஸ்ட ஈடானது எமது இழப்பிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாக இருந்தபோதும் ஆறுதலான விடயமாக இருக்கிறது, இந் நஸ்ட ஈட்டை அதிகரித்து வழங்கினால் எமக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

நிகழ்வில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை மையத்தின் தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவின் முகாமையாளர் சங்கீதா குணரட்ன, நிகழ்ச்சித்திட்ட அலுவலகர் பிராங்கின் சொய்சா, செயற்திட்ட உதவியாளர் பாலசுப்பிரமணியம் வினோதினி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எஸ்.ஜலதீபன், வவுனியா மாவட்ட செயலக மீள்அகுடியேற்ற பிரிவின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ.கிருபாசுதன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

#vavuniya  #kumamkulllam  #tamilnews  #srilanka

No comments

Powered by Blogger.