துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது!

அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வென்னப்புவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ – வய்க்கால பிரதேசத்தில் வைத்து 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கான அனுமதிப்பத்திரம் பாதுகாப்பு அமைச்சினால் சந்தேகநபரின் தந்தைக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த அனுமதிப்பத்திரம் 2003 ஜனவரி 27 ஆம் திகதியின் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி பெறுவதற்கு பயன்படுத்தக் கூடியது என்றும் தனது தந்தை முன்னாள் சிப்பாய் என்பதால் அவர் அவற்றைப் பயன்படுத்தியிருந்ததாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

#vennappuva   #srilanka #tamilnews

No comments

Powered by Blogger.