அல­ரி­மா­ளி­கை­யில் திரு­மண நிகழ்­வு­க­ளுக்குத் தடை!

எதிர்­வ­ரும் காலங்­க­ளில் அல­ரி­மா­ளி­கை­யில் திரு­மண நிகழ்­வு­களை நடத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­கப் போவ­தில்லை என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­துள்­ளார்.

சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்­ன­வின் மூத்த புதல்­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சத்­துர சேனா­ரத்­ன­வின் திரு­மண நிகழ்வு அண்­மை­யில் அலரி மாளி­கை­யில் நடை­பெற்­றது.
சத்­துர சேனா­ரத்­ன­வின் திரு­ம­ணம் தொடர்­பில் மகிந்த தரப்­பி­னர் கடு­மை­யான விமர்­ச­னங்­களை வெளி­யிட்டு வந்­த­னர்.

ஆனால் ‘அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சில விதி­மு­றை­க­ளுக்கு அமை­யவே, அதா­வது வெளி­வா­ரி­யான நிகழ்­வு­க­ ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற கட்­ட­ணங்­க­ளுக்கு அமை­யவே இந்த திரு­மண நிகழ்வு நடத்­தப்­பட்­டது என்று தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கம் அறி­வித்­தி­ருந்­தது.

இந்தத் திரு­மண நிகழ்­வுக்­காக அல­ரி­மா­ளி­கைக்கு 21 இலட்­சத்து 80 ஆயி­ரம் ரூபா வழங்­கப்­பட்­டமை தொடர்­பான தக­வல்­க­ளும் ஊட­கங்­க­ளில் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இந்­நி­லை­யில் எதிர்­வ­ரும் காலங்­க­ளில் திரு­மண நிகழ்­வு­களை அல­ரி­மா­ளி­கை­யில் நடத்­தப்­போ­வ­தில்லை என தலைமை அமைச்­சர் அறி­வித்­துள்­ளார்.

#srilanka   #colombo   #Ranil   

No comments

Powered by Blogger.