முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியேறினால் கூட்டமைப்புக்கு பின்னடைவு.!

தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் இருந்து எந்தக்கட்சி வெளியேறினாலும் அதனால் தமிழ் மக்களுக்கே பாதிப்பாக இருப்பதுடன் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவும் அமையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சர் விடயத்தில் மிகவும் கவனமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதில் எங்களுடைய கட்சி தலைமை மிகவும் கவனமாக இருந்து வருகின்றது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கவேண்டும், அவர் வெளியேறிச் செல்லக்கூடாது என்பதில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மிகவும் கவனமாக இருக்கின்றது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு பின்னடைவினை ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் வடமாகாண முதலமைச்சர் வெளியேறினாலும் அந்த கட்சிகளுக்கு பாதிப்பில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் அதனால் தமிழ் மக்களுக்கே பாதிப்பாக இருப்பதுடன் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவும் அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வலுப்படுத்தி, பலப்படுத்தி, கொள்கையுடன் இணைந்து செல்லக்கூடியவர்களை இன்னும் உள்வாங்கிக்கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் வகையில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#batticalo    #viyalendrean   #tamilnews  #srilanka  #TNNA  #vickneswaran

No comments

Powered by Blogger.