வவுனியாவில் பெண் உட்பட 6 பேர் புதையல் தோண்டிய கைது.!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் நீராவி பகுதியில் புதையல் தோண்ட முற்றபட்ட பெண் உட்பட 6 பேர் இன்று ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன.

கைது செய்யபட்டவர்களை நாளை நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

No comments

Powered by Blogger.