100 ஏக்கா் விவசாய நிலத்தை அபகரித்த வனவள திணைக்களம்!

முல்லைத்தீவு- செம்மலை கிழக்கு புளியமுனை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களுக்கு சொந்த மான 100 ஏக்கர் நிலத்தை வனவள திணைக்களம் வன பகுதியாக அறிவித்துள்ளது. இதனால் விவசாயத்தை நம்பியிருக்கும் தாம் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக் கள்  பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்ககேண்டும் எனவும் கேட்டுள்ளனனர்.
 செம்மலை கிழக்கு புளியமுனை கிராமத்தில் 1972ம், 1976ம் ஆண்டுகளில் சுமார் 340 குடும் பங்களுக்கு மேட்டு நில பயிர்ச்செய்கைக்காக தலா 2 ஏக்கர் வீதம் 680 ஏக்கர் நிலம் வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் 1983ம் ஆண்டு போர் காரணமாக மக்கள் அந்த பகுதிகளிலிருந் து  வெளியேற்றப்பட்டதன்  பின்னர் மீண்டும் 2015ம் ஆண்டு தமது விவசாய நிலங்களுக்கு
 சென்றிருந்த நியைலில் வனவள திணைக்களத்தினால் மக்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி வனவள திணைக்களத்திற்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது. இதனையும் மீறி ம க்கள் தங்கள் காணிகளுக்குள் சென்று விவசாயம் செய்த நிலையில் அப்போதும் வனவள தி ணைக்களத்தினால் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் தமது விவசாய
 நிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து மாகா ணசபை உறுப்பினர் து.ரவிகரன் குறித்த பகுதிகளுக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆரா ய்ந்துள்ளனர். இதன்போது செம்மலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் காசிநாத பிள்ளை ப hஸ்கரன்   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 340 குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கா்
வீ தம் காணிகள் வழங்கப்பட்டது. இந்த காணிகளை துப்புரவு செய்து மக்கள் விவசாயம் செய் துவந்த நிலையில் 1983ம் ஆண்டு போர் காரணமாக நாங்கள் வெளியேற்றப்பட்டோம். மீண் டும் 2015ம் ஆண்டு எங்களுடைய விவசாய நிலங்களுக்கு சென்று நாங்கள் கச்சான் விதைக் க முயன்றபோது வனவள திணைக்களம் எம்மை விரட்டியடித்தது. பின்னர் வனவள திணைக்களத்தின் எதிர்ப்பையும் மீறி காணிகளை துப்புரவு செய்து கடந்தவருடம் கச்சான் விதைத்தோ ம். அதேபோல் இந்த வருடமும் கச்சான் விதைப்பதற்காக எங்களுடைய காணிகளை துப்புரவு செய்ய முயன்றபோது வனவள திணைக்களம் எங்களை தடுத்துவருகின்றது. காணிகளுக்குள் சென்றால்  கைது செய்வோம்  என அச்சுறுத்துகிறது. 
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார். தொடர்ந்து கிட்டினன் சிவபதி என்ற விவசாயி கருத்து தெரிவிக்கையில், நாங்கள் விவசாயம் செய்த காணிகள் போர் காரணமாக நாங்கள் வெளியேறிய பின்னர் எங்க ளுடைய நிலங்களில் நின்ற ஒரு சில காட்டு மரங்களை வைத்துக் கொண்டு அவை வன பகு தி என வனவள திணைக்களம் கூறுகிறது. 
இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. வருடத்தில் 3 மாதங்கள் செய்யப்படும் கச்சான்(நிலக்கடலை) செய் கையினை நம்பியே எங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது. அதனையும் தடுத்து நிறுத்தினால் நாங்கள் என்ன செய்வது? இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் கச்சான் விதைக்கவேண்டும். அ ந்தபோகம்  முடிந்தால்  அதற்கு பின்னர் செய்ய முடியாது.  
இந்நிலையிலேயே மாகாணசபை  உறுப்பினர் து.ரவிகரனை அழைத்து நிலமைகளை காண்பித்துள்ளோம் என்றார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கூறுகையில், மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் எமது மக்களின் வயல் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு மக்கள் விவச hயம் செய்ய முடியாத நிலையில் வாழ்கின்றனர். 
அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் மக்களுடைய விவசாய நிலங்களை வன பகுதியாக அடையாளப்படுத்தும் செயற் பாட்டை வனவள திணைக்களம் செய்து வருகின்றது. இவ்வாறு சிறுக..சிறுக மக்களுடைய வி வசாய நிலங்களை ஆக்கிரமிப்பதாலேயே ஒட்டுமொத்தமாக முல்லைத்தீவு மாவட்டம் வறுமை யில் 2ம் இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது என்றார். 


No comments

Powered by Blogger.