பல்கலை மாணவர்களின் நடைபயணம் தற்பொழுது கிளிநொச்சியினை நோக்கிய செல்லுகிறது!

 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் வரையிலான கவனயீர்ப்பு நடைபயணம் தற்போது ஆனையிறவைக் கடந்து பண்பாட்டு தலைநகரான கிளிநொச்சியினை நோக்கிய பயணிப்பதாக அறியமுடிகிறது..

பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்தின் இரண்டாம் நாள் பயணம் இன்று காலை இயக்கச்சியிலிருந்து ஆரம்பகமாகியிருந்தது. மாணவர்களுடன் இணைந்து பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலளர் செல்வராஜா கஜேந்திரன்  தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார். அவருடன் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் சில மணிநேரத்தில் கிளிநொச்சியை சென்றடைந்ததும் மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் நடைபயணத்தில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.No comments

Powered by Blogger.