அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மாலைத்தீவு விஜயம்!

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரின் விடுதலை குறித்து அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
தனது சொந்த செலவில் மாலைத்தீவிற்கு விஜயம் செய்த அமைச்சர் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்றாஹிம் மொஹமட்டை சந்தித்து இது விடயமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பெரும்பான்மை இனத்தை சேர்ந்த குறித்த நபரின் விடுதலைக்கான சிறுபான்மை இன அமைச்சரின் இந்த முயற்சியானது இன நல்லிணக்கத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து மூன்று பிள்ளைகளின் தந்தையான லூஹிரு மதுசாந்த என்பவர் கடந்த மூன்றறை வருடங்களுக்கு முன்னர் மாலைத்தீவு அரசாங்கத்தினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக குறித்த நபரின் மனைவி தனது பிள்ளைகளுடன் அமைச்சரை சந்தித்து, தனது கணவர் எந்த குற்றமும் செய்யாத நிரபராதி என்றும் அவர் தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் பைசர் முஸ்தபா ஜனாதிபதியின் தூதுவராக மாலைதீவுக்கு விஜயம் செய்ததுடன், மாலைதீவின் புதிய ஜனாதிபதியைச் சந்தித்த முதலாவது இலங்கை அமைச்சர் பைசர் முஸ்தபா என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.