துப்பறியும் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்!

வவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

கூப்பர் என அழைக்கப்படும் குறித்த மோப்பநாய் இன்று (புதன்கிழமை) காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்போதே மின்சாரம் தாக்கியுள்ளதுடன், மோப்பநாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸாருடன் இணைந்து பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் நடவடிக்கைகளில் குறித்த மோப்பநாய் ஈடுபட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் இரண்டரை வயதுடைய மோப்ப நாயை (கூப்பர்) காலை 6 மணியளவில் உடற்பயிற்சிக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது மைதான வளாகத்தில் மோப்பநாயை மின்சாரம் தாக்கியதுடன், பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மோப்பநாய் கால்நடை வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.