கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்ந்தும் இயங்கும்: சம்பிக்க உறுதி

கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகம் தொடர்ந்தும் பழைய இடத்திலேயே இயங்கும் என பெருநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள அமைச்சர் சம்பிக்கவின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தை மூடுவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் தமது பலத்த ஆட்சேபனையை தெரிவித்தனர்.

இதன்போதே கல்முனையில் இயங்கி வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தை மூடிவிட்டு, அதன் பணிகளை அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு, கல்முனை அலுவலகம் தொடர்ந்தும் பழைய இடத்திலேயே இயங்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.