பதவி மோகத்தால் மஹிந்தவுடன் மைத்திரி கூட்டணி!

பதவி மோகத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தனது பதவியினைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து மாற்று அரசாங்கமொன்றை அமைக்க முயற்சிக்கின்றார். அந்த முயற்சிக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை.

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து மாற்று அரசாங்கமொன்றினை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது” என பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Powered by Blogger.