களைக்கட்ட தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டம்!

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந்தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கிறது. வட இந்தியாவில் துர்கா பூஜை என்று அழைக்கபடும் இந்த நவராத்தி 10 நாட்கள் விஷேசமாக கொண்டாடபடும்.

நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.க‌ன்‌னி ரா‌சி‌யி‌ல் சூ‌ரிய‌ன் ச‌ஞ்ச‌ரி‌க்கு‌‌ம்போது இ‌ல்ல‌த்‌தி‌ல் அ‌ம்‌பிகை வ‌ழிபா‌ட்டை நட‌த்‌தினா‌ல் இ‌ல்ல‌த்‌தி‌ல் ந‌ல்லது நட‌க்கு‌ம் எ‌ன்பது நமது மூதாதைய‌ரி‌ன் ந‌ம்‌பி‌க்கை. அத‌ன்படி நவரா‌த்‌தி‌ரி நா‌ட்க‌ளி‌ல் ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு அ‌ம்‌பிகை‌க்கு உக‌ந்த நாளாக கருத‌ப்படு‌கிறது. இ‌ன்று மகே‌‌ஸ்வ‌ரி‌க்கு உக‌ந்த நா‌ள்.

இந்த ஆண்டு நவராத்திரிக்கு புதுவரவாக பஞ்சாமிர்த பெருமாள், பாகுபலி விநாயகர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் குழந்தைகளை கவரும் வகையில் கண்கவர் கார்ட்டூன் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளது. நவராத்திரி பண்டிகைக்காக ஒவ்வொரு ஆண்டும் புது பொம்மைகளை வாங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் மக்களிடையே உண்டு. அதற்கு ஏற்றார் போல இந்த ஆண்டு புதுவரவாக உள்ள பொம்மைகளை ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர்.

No comments

Powered by Blogger.