எரிபொருள் விலைத் திருத்தம் இன்று முன்னெடுப்பு!

இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்றைய தினம்(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், எரிபொருள் விலையானது இரண்டு தடவைகள் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 10ஆம் திகதி செய்யப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்துக்கமைய ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 4 ரூபாவாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.