கொட்டகலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்!

கொட்டகலை - பொறஸ்கிறிக் தோட்டத்தின் கொழுந்து மடுவத்தில் இன்று காலை ஒன்று கூடிய தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அடிமையாகி போய்விடக் கூடாது.


சம்பள உயர்வை பெற்றுத் தர நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதேவேளை தொழிலாளர்கள் சார்பாக பேச்சுவார்த்தயைில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு பூரண ஆதரவை நாம் ஆதரவை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளனர்.
#Nuwara Eliya #கவனயீர்ப்பு  #கொட்டகலை - பொறஸ்கிறிக்
Powered by Blogger.