மட்டக்களப்பில் இளம் தமிழ் பெண் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் இளம் தமிழ் பெண்ணொருவர் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் சாலினி (18 வயது) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்த உறவினர்கள் நேற்றிரவு 11 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

#Batticaloa  #தூக்கில்  #சடலமாக  #அருளானந்தம் சாலினி  #களுவாஞ்சிக்குடி  #வைத்தியசாலை

No comments

Powered by Blogger.